தமிழகத்தில் தினசரி 11 ஆயிரம் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்று மார்ச் மாத இறுதியில் 689 ஆக உயர்ந்ததாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் தொற்று பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்படுவோர் சதவீதமும் 0.6ல் இருந்து 3 ஆக உயர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. எனவே, தற்போது மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனை 11 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் மக்கள் தொகைக்கு ஏற்ப பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.