"உங்களுக்கு 24 மணிநேரம் டைம்..." - டைவர்ஸ் அறிவிப்புக்கு பின் கடும் கோபத்தில் சீறிய ரஹ்மான்

Update: 2024-11-24 06:04 GMT

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்து அறிவிப்புக்கு பின், விவாகரத்து காரணங்கள் குறித்து அவதூறு கருத்துகள் பரவி வந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் சமூக வலைத்தளங்கள் மற்றும் யூடியூபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் திரையுலகினரையும், திரையுலக ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான்-சாய்ரா பானுவின் விவாகரத்து அறிவிப்பு...

29 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து விவாகரத்து பெற போவதாக, சாய்ரா பானு அறிவித்த நிலையில், அதனை உறுதிப்படுத்தினார் ஏ.ஆர்.ரகுமான்..

இது தொடர்பாக அவர் வெளியிட்ட உருக்கமான அறிக்கையில், தங்களின் கடினமான இந்த அத்தியாயத்தில் பிரைவசி தேவை என கூறியிருந்தார்.

இருப்பினும், விவாகரத்துக்கான காரணம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவின... குறிப்பாக, ஏ.ஆர். ரகுமானின் இசைக்குழுவில் இடம்பெற்றிருந்த கிட்டார் கலைஞர் மோகினி டே அவரது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றது பேசு பொருளானது...

இதுபோல், ஏ.ஆர்.ரகுமான் குறித்து பல அவதூறு கருத்துகள் இணையத்தில் உலா வந்து கொண்டே இருந்தன...

இது தொடர்பாக ஏ.ஆர். ரகுமானின் மகன் ஏ.ஆர். அமீன் தனது வேதனையை பகிர்ந்திருந்தார்..

தனது தந்தை குழந்தை போன்றவர் என உருக்கமாக குறிப்பிட்டிருந்த மீன், இசைத்துறையில் ஏ.ஆ.ரகுமான் செய்த சாதனைக்காக மட்டுமில்லாமல், பல ஆண்டுகளாக அவர் பெற்ற மதிப்பு, மரியாதை மற்றும் அன்பு ஆகியவற்றிற்காகவும் லெஜண்ட்டாக பார்க்கபடுகிறார் என்று தெரிவித்திருந்தார்.

அவர் குறித்த வதந்திகளும், முகாந்திரம் இல்லாத குற்றச்சாட்டுகளும் மனதை காயப்படுத்துவதாக வேதனையை வெளிப்படுத்தி இருந்த அமீன், விவாகரத்து தொடர்பான போலியான கட்டுக்கதைகள் பரப்புவதை நிறுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இருப்பினும் ஏ.ஆர். ரகுமான் விவாகரத்தையே கண்டன்டாக்கி வந்தன சில யூடியூப் பக்கங்கள்..

இந்நிலையில் தான் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார், ஏ.ஆர். ரகுமானின் வழக்கறிஞர்.

அந்த நோட்டீஸ்-ல் சமூக வலைத்தளங்களில், அவதூறு பரப்பும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள், சிலர் கற்பனையில் அளித்த பேட்டிகள் போன்ற அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த அவதூறு கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை ஒரு மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும் என்று காட்டத்துடன் தெரிவித்துள்ளதோடு, இதைச் செய்யாவிட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப்பிரிவுகளின் கீழ் அவதூறு வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...

இதனால் விவாகரத்து குறித்து கட்டுக்கதைகளை வெளியிட்ட சமூக வலைத்தளவாசிகள் விரைந்து அதனை நீக்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது..

Tags:    

மேலும் செய்திகள்