இந்தியாவில் நடக்கும் ரயில் விபத்துகளுக்கு 90 சதவீதம் காரணமே இது தான்.. விபத்தை தவிர்க்க..
ரயில் விபத்துகளை தவிர்க்க உருவாக்கப்பட்டுள்ள ரயில் பாதுகாப்பு நிதி பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பு அலசுகிறது.
இந்தியாவில் நடைபெறும் ரயில் விபத்துகளில் 90 சதவீதம், ரயில் பெட்டிகள் தடம் புரளுதல், நேரடி மோதல், மற்றும் லெவல் கிராசிங்குகள் காராணமாக நடைபெறுவதாக கணக்கிப்பட்டுள்ளது.
2017-18 மத்திய பட்ஜெட்டில், தேசிய ரயில் பாதுகாப்பு நிதி உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு படிப்படியாக ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதில் இருந்து ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாயை இந்திய ரயில்வே நிர்வாக வாரியம், பாதுகாப்பு ஏற்படுகளை பலப்படுத்த கட்டாயம் செலவிட வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இதன் விளைவாக, கடந்த 5 வருடங்களில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை 2017-18ல் 54ஆக இருந்து, 2021-22ல் 27ஆக குறைந்துள்ளது.
ரயில்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை 2017-18ல் 3ஆக இருந்து 2021-22ல் 2ஆக குறைந்துள்ளது.
2017-18ல், ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை 10ஆக இருந்தது. 2019-20 மற்றும் 2020-21ல் ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ஒரு விபத்து கூட நடைபெறவில்லை.
அனைத்து வகை ரயில் விபத்துகளின் எண்ணிக்கை 2018-19ல் 59ஆகவும், 2019-20ல் 55ஆகவும், 2020-21ல் 22ஆகவும், 2021-22ல் 35ஆகவும் இருந்தது.