ஓனரை கடத்தி மிரட்டிய உழியர்கள்.. 1.5 கிலோ தங்கம், 20 செல்போன் பறிப்பு - கோயம்பேட்டில் நடந்த பகீர் சம்பவம்
- சென்னை கோயம்பேட்டில் ஒன்றரை கிலோ தங்க நகைகள், விலை உயர்ந்த 20 செல்போன்களைக் கொண்டு வந்தவரைக் கடத்திய 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
- திருச்சியை சேர்ந்த முகமது அஸ்வர் அங்கு சொந்தமாக கடை வைத்து நடத்தி வருகிறார்.
- இவரது கடையில் பணிபுரியும் முகமது அல்பான், என்பவரிடம் நேற்று முன் தினம் ஒன்றரை கிலோ தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த 20 செல்போன்களை தந்து சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு கடையில் கொடுத்துவிட்டு வருமாறு அனுப்பி வைத்துள்ளார்.
- கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கிய அல்பன், டாக்சியில் செல்லத் தயாரான போது அங்கு காரில் வந்த 3 பேர் அல்பனிடம் நைசாக பேசி கடத்தி சென்று வண்டலூர் பகுதியில் வைத்து அவரிடம் இருந்த பொருட்களை பறித்துக் கொண்டு மிரட்டி அனுப்பியுள்ளனர்.
- அல்பன் அளித்த புகாரின் பேரில் போலீசார் தனிப்படைகள் அமைத்து சிசிடிவி, மற்றும் செல்போன் சிக்னல் உதவியுடன் திருச்சியை சேர்ந்த அசுரபுதீன், வசந்தகுமார், பிரவீன் ஆகிய மூவரையும் கைது செய்து நகைகள், மற்றும் செல்போன்களை மீட்டனர்.
- விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் ஏற்கனவே இந்த கடையில் வேலை செய்தவர்கள் என்பதும், நகைகள் - செல்போன்கள் கொடுத்தனுப்பப்படும் தகவலை முன் கூட்டியே தெரிந்து கொண்டு பறித்துச் சென்றதும் கண்டறியப்பட்டது.