"ஜல்லிக்கட்டு வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்" - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

Update: 2022-12-23 02:56 GMT

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும் என நம்புவதாக கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனத்தில், துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், மத்திய அரசு வழங்க வேண்டிய 90 லட்சம் டோஸ் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசியில், 60 லட்சம் டோஸ்கள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக கூறினார். தமிழகத்தில், தற்போது கோமாரி நோய் தாக்கம் இல்லையென்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். மேலும், 5 லட்சம் கோமாரி நோய் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாக தெரிவித்தார். ஜல்லிக்கட்டு வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்தால், காளைகளுக்கு பாதிப்பில்லாத வகையில், ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்