தனியார் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை, அரசு பள்ளிகளில் இருமொழிக் கொள்கை என்ற பாகுபாடு சரியா? என பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். மும்மொழிக் கொள்கை குறித்தான பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷின் கருத்தை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஏழைக் குழந்தைகளை இப்படி வஞ்சிக்கலாமா? என கேட்டுள்ளார்.
மத்திய ஆட்சியில் இருக்கும் போது மறந்து விடுவதும் எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும் போது கோரிக்கை வைப்பதுமாகத்தான் திராவிட மாடல் அரசு உள்ளது என தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.