ஆந்திர மாநிலம் ஓங்கலை பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். மளிகை கடை வியாபாரியான இவர், வெங்கட சுமலதா என்பவரை திருமணம் செய்து 12 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், ரத்த அழுத்தம் அதிகமானதால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்ட ஹரிகிருஷ்ணன், சென்னை, கேகே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதில், மூளையில் இருந்து அதிகப்படியான ரத்த கசிவு ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் கணவன் சிரமப்படுவதை கண்டு மனைவி மன வேதனையடைந்துள்ளார். இந்நிலையில், தங்கியிருந்த மருத்துவமனை விடுதியின் அறைக்கு சென்ற வெங்கட சுமலதா, 12 வயது மகள் மகன்னியாவுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.