15 மீ முன்னோக்கி வந்து தாக்கிய அலை.. இடிந்து விழுந்த அம்மன் கோயில் தூண்

Update: 2022-12-10 04:42 GMT

மாமல்லபுரம் அருகே நெம்மேலி குப்பத்தில் பலத்த சீற்றம் காரணமாக கடல் அலைகள் 15 மீட்டர் தூரத்திற்கு முன்னோக்கி வந்து தாக்கியதால், அம்மன் கோயில் முன் பக்க தூண், தரைதாளம் இடிந்து விழுந்தது. இந்த நிலையில், தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ஏற்கனவே

பல முறை வலியுறுத்தியும் முன்னர் உள்ள அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். புயலினால் கடல் அலைகள் எப்போது குடியிருப்புக்குள் புகுந்து வந்து தாக்குமோ என்ற உயிர் பயத்தில் சவுக்குதோப்புகளில் தஞ்சம் அடைந்துள்ளோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தரங்கம்பாடியில் கடல் சீற்றம் காரணமாக டேனிஷ் கோட்டை அருகே கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் எதிரொலியால், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால், கடற்கரைக்கு அருகில் இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க டேனிஷ் கோட்டை அருகே கடை அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் அலைகள் கோட்டையின் பிரதான மதிற்சுவரை நெருங்கி வருகிறது. இதனால், டேனிஷ் கோட்டையை பாதுகாக்கும் ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்