ராமஜெயம் கொலை வழக்கில் இரண்டாம் கட்ட சோதனை தொடங்கியது...

Update: 2023-01-19 11:04 GMT
ராமஜெயம் கொலை வழக்கில் இரண்டாம் கட்ட சோதனை தொடங்கியது...

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் இரண்டாவது கட்ட உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது.

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் ரவுடிகள் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது. இதில், முதற்கட்டமாக 4 பேரிடம் சுமார் 8 மணி நேரமாக உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்ட நிலையில், இரண்டாவது கட்டமாக கலைவாணன், செந்தில், திலீப் ஆகியோரிடம் மயிலாப்பூரில் உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது. இந்த சோதனையில் கூடுதலாக சுரேந்தர் என்பவரும், முதற்கட்ட சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட சத்யராஜ் என்பவரும் மீண்டும் கலந்து கொள்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்