கூகுள் மேப் காட்டிய பாதை... யோசிக்காமல் காரை ஓட்டியதால் நடந்த விபரீதம்
கிருஷ்ணகிரி மாவட்டம் பேகெப்பள்ளியில் தரைப்பாலத்தை கடக்க முயன்ற போது, 4 பேருடன் கார் வெள்ளத்தில் சிக்கியது. கர்நாடக மாநிலம் சர்ஜாபூரை சேர்ந்த ராகேஷ் கூகுள் மேப்பை பார்த்து வாகனத்தை இயக்கியதால், கார் வெள்ளத்தில் சிக்கியுள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர், முதலில் 4 பேரை பத்திரமாக மீட்டனர். பின்னர் ஜேசிபி இயந்திரத்தில் கயிறு கட்டி, வெள்ளத்தில் சிக்கிய காரை மீட்டனர்.