விழுப்புரத்தில் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் அதிகளவு வசிக்கும் பாண்டியன் நகரை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரத்தில் கொட்டி தீர்த்த கனமழையால், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள நீர் ஆறாக ஓடியது. இதனால் அதனை ஒட்டி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் வசித்து வரும் பாண்டியன் நகரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன்காரணமாக அவர்கள் நெடுஞ்சாலையை கடந்து வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் வெள்ள காலங்களில் மக்களுக்கு உதவ வேண்டிய அரசு ஊழியர்களுக்கே, மற்றவர்கள் உதவி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.