"இது முழுக்க முழுக்க அரசோட தவறு.. பப்ளிசிட்டி மட்டும் பண்ணிக்கிறீங்க’’.கொலையானவர் மனைவி கேட்ட கேள்வி

Update: 2024-12-02 05:02 GMT

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே படுகொலை செய்யப்பட்ட மூன்று பேரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறச் சென்ற அமைச்சரிடம் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சரமாரி கேள்வி எழுப்பினர். சேமலைக்கவுண்டன் பாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தங்கி இருந்த தாய், தந்தை, மகன் ஆகிய மூன்று பேர் வெட்டி கொலை செய்யப்பட்டநிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அமைச்சர் சாமிநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது செந்தில்குமாரின் மனைவி கவிதா, இது முழுக்க முழுக்க அரசின் தவறு என குற்றம்சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்