கேரளாவில் சாலை பாரமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர், தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொதிக்கும் தாரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளா மாநிலம் சிலவனூர் பகுதியிலுள்ள சாலையில், குண்டும் ,குழியுமாக உள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. இந்தநிலையில் அங்கு சாலை சீரமைப்பு பணிகள் நடைபெறுவது குறித்து எந்த அறிவிப்பு பலகையும் வைக்கப்படாததால், அந்த சாலையில் வினோத் வர்கீஸ் என்பவர் தனது சகோதரர் மற்றும் நண்பரோடு காரில் பயணித்துள்ளார். அப்போது சாலை சீரமைப்பில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், காரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து காரில் வந்தவர்களுக்கும், ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே, ஊழியர் ஒருவர் கொதிநிலையில் இருந்த தாரை, காரில் வந்தவர்கள் மீது ஊற்றியுள்ளார். இதில் காரில் வந்த மூவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.