ட்விட்டரை வாங்கிய கையோடு, பல தடாலடி அறிவிப்புகளை வெளியிட்டு... அனைவரின் வசை சொல்லுக்கு ஆளானவர், எலான் மஸ்க். சமீபத்தில் ட்விட்டரின் அடையாளமாக கருத்தப்பட்ட நீல நிற பறவை லோகோவை மாற்றி மீம்ஸ்களில் வைரலான நாய் படத்தை லோகோவாக வைத்து, அதிரடி காட்டினார். இந்நிலையில், தற்போது ட்விட்டர் என்ற பெயரையே டிட்டர் என மாற்றியுள்ளார். அமெரிக்காவில் உள்ள ட்விட்டர் தலைமை அலுவலகத்தில் உள்ள ட்விட்டர் என்ற போர்டில்
டபிள்யூ என்ற எழுத்து மறைக்கப்பட்டுள்ளது. சட்டப்பூர்வமாக ட்விட்டர் என்ற பெயருடன் தொடர வேண்டியிருப்பதால், போர்டையே மாற்றுவதற்கு பதிலாக எழுத்தை மட்டும் மறைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.