நேற்று CSK மேட்ச் நடக்கும் போது பின்னணியில் நடந்த பகீர் சம்பவம்... ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
சென்னை சேப்பாக்கம் பகுதியில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு கள்ளச் சந்தையில் விற்பனை செய்த 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை இரவு நடைபெற்றது. அந்த போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் சிலர் விற்பனை செய்வதாக தகவல் வந்தது. இதையடுத்து, திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீசார், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதிகளில் 17 பேர் ஐபிஎல் டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களைக் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, விற்பனைக்கு வைத்திருந்த 47 டிக்கெட்டுகளையும், 53 ஆயிரத்து 200 ரூபாய் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.