பம்பைக்கு வந்த தங்க அங்கி.. "சாமியே சரணம் பொன் ஐயப்பா.." மெய்மறந்து பாடிய பெண் கலெக்டர் !

Update: 2022-12-29 11:19 GMT

பம்பைக்கு வந்த தங்க அங்கி ஊர்வலத்தின் போது பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா ஐயர் தனது மகனுடன் வந்து ஐயப்பனுக்கு சரணம் பாடிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது... மண்டல பூஜையின் நிறைவாக சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்க தங்க அங்கி 26ம் தேதி பம்பை வந்தடைந்தது. பம்பை வந்த தங்க அங்கியை பத்தினம் திட்டா ஆட்சியர் திவ்யா ஐயர், தனது மகனுடன் காண வந்தார். அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்த அவர், தங்க அங்கியின் முன் நின்று, மகனைத் தூக்கிக் கொண்டு ஐயப்பனுக்கு சரணம் சொல்லி பாடல் பாடினார்... இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

Tags:    

மேலும் செய்திகள்