இந்தியர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த.. 'அமுல் பேபியை' உருவாக்கியவர் மறைந்தார்..! - மறக்க முடியுமா அந்த கொழு கொழு முகத்தை?

Update: 2023-06-24 02:40 GMT

அமுல் கேர்ள் படத்தை உருவாக்கிய சில்வெஸ்டர் டகுன்ஹா காலமானார். அவர் குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்..

ஒரு விளம்பரம் மக்களை சென்று சேருகிறது என்றால் அதில் வரும் காட்சிகள் இடம் பெறும் வசனங்கள், புகைப்படங்கள் இவையெல்லாம் பிரதான காரணங்கள்.

அதிலும் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவது என்பது அவ்வளவு எளிது அல்ல..

ஆனால் அதை கனகச்சிதமாக செய்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் ஒரு பிராண்டின் வெண்ணையை பிடிக்க வைத்து ரசித்து ருசித்து சாப்பிட வைத்தவர் தான் சில்வெஸ்டர் டகுன்ஹா..

பால் பொருட்களில் மிகவும் பிரபலமான அமுல் நிறுவனத்தில் விளம்பரத்துறையில் முக்கிய அங்கம் வகித்தவர்.

இவரிடம் 1966 இல் அமுல் நிறுவனத்தின் வெண்ணெயைப் பிரபலப்படுத்தும் விதமாக விளம்பரத்தை தயார் செய்ய அனுகியிருந்தனர்..

அதனை பயன்படுத்தி கொள்ள நினைத்த டகுன்ஹா தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் தன்னை நிலை நிறுத்தக்கூடிய ஒரு சின்னத்தை உருவாக்க எண்ணியதுடன் ஒரு குழந்தை முகத்தை பிராண்டின் முகமாக உருவாக்க நினைத்தார்..

அதன்படி ஒரு பெண் குழந்தையின் முகத்தை வடிவமைத்தார். ஒரு cute பெண் குழந்தை புள்ளிகள் இட்ட ஒரு கவுனுடன் சிவந்த கண்ணங்களுடன் வெண்ணெயை சுவைப்பது போல உருவானாள்.

இந்த சின்னமானது முதன்முதலில் மும்பையில் உள்ள சில விளக்குப் பலகைகளில் "எங்கள் தினசரி ரொட்டியைக் கொடுங்கள்: அமுல் வெண்ணெயுடன்" என்ற வரியுடன் அறிமுகமானது.

இந்த விளம்பரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வெண்ணெயில் சுவையால் பலரும் ஈரக்கப்பட்டனர்..இதனால் அமுல் பெண் அனைவருடைய குடும்பத்திலும் ஒரு அங்கமாகவே ஆனால் என்றே தான் சொல்ல வேண்டும்..

இதனால் அதீத லாபம் பார்த்த நிறுவனத்தின் வெற்றி... நிச்சயம் அமுல் பெண்ணை வடிவத்தை டகுங்காவயே சேரும் என்றே சொல்லலாம்..

ஆண்டுகள் பல கடந்தாலும் அமுல் பெண்ணை போன்ற ஒரு அடையாளத்தை எந்த விளம்பர நிறுவனங்களாலும் உருவாக்க முடியவில்லை என்பதே நிதர்சனம்..

இத்தனை பெருமையை கொண்ட டகுன்ஹா கம்யூனிகேஷன்ஸ் தலைவர் ஸ்ரீ சில்வெஸ்டர் டகுன்ஹா உடல் நலக்குறைவால் அண்மையில் காலமானார்..

அவரது மறைவுக்கு அமுல் நிறுவனத்தை சேர்ந்த அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்