கழிவுநீர் வாய்க்காலில் சிக்கித் தவித்த பசு.. கான்கிரீட்டை உடைத்து காப்பாற்றிய அதிகாரிகள்
கழிவுநீர் வாய்க்காலில் சிக்கிய பசு மாட்டை கான்கிரீட் தளத்தை உடைத்து தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்...
கோவை சவுரிபாளையம் பகுதியில் பசுமாடு ஒன்று கழிவு நீர் வாய்க்காலில் விழுந்துள்ளது... அதை மீட்க முடியாத மாட்டின் உரிமையாளர் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர். தொடர்ந்து 5 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் வாய்க்காலில் சிக்கி இருந்த பசுவை, கான்கிரீட் தளத்தை உடைத்து தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்... காப்பாற்றிய மகிழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் பசு மாட்டை ஆரத்தழுவி அன்பை வெளிக்காட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.