மருத்துவ கல்லூரிக்கு திடீர் விசிட் செய்த கலெக்டர்..! ஆய்வில் சிக்கிய மருத்துவர்கள்!
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் அலட்சியமாக செயல்படும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் எச்சரித்துள்ளார். பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாமல், கர்ப்பிணிப் பெண்கள் கடும் அவதி அடைவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணியில் இருக்க வேண்டிய மருத்துவர்கள் எங்கே என்று செவிலியர்களிடம் கேள்வி எழுப்பினார். பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாமல் அலட்சியமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்தார்.