அரண்மனைக்குள் நுழைவது யார்...?..நடுரோட்டில் மோதிய அரச குடும்பத்தினர் - கல்வீச்சு..பரபரப்பு..
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அரண்மனைக்குள் நுழைவதற்கு அரச குடும்பத்தினர் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேவார் அரச குடும்பத்தின் இருபிரிவினர் இடையே அரண்மனைக்கு வெளியே மோதல் வெடித்தது. புதிதாக முடிசூட்டப்பட்ட ராஜ்சமந்தின் பாஜக எம்.எல்.ஏ விஸ்வராஜ் சிங் மேவார், அவரது உறவினர் லக்ஷய் ராஜ் சிங் மேவார் மற்றும் அவர்களது மாமா அரவிந்த் சிங் மேவார் ஆகியோர் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டனர்... விஸ்வராஜ் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அரண்மனைக்குள் நுழைய முயன்ற நிலையில், உள்ளே நுழைய குடும்ப உறுப்பினர்களால் அனுமதி மறுக்கப்பட்டது... பதிலுக்கு அவரது ஆதரவாளர்கள் கல்வீச்சில் ஈடுபடத் துவங்கினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவிய நிலையில், ஆட்சியர் அரவிந்த் குமார் போஸ்வால் பேச்சுவார்த்தை நடத்தினார்...