தமிழக மக்கள் தலையில் பேரிடி... நம்பியது எல்லாம் பொய்யா? - உண்மையை உடைத்த மத்திய அரசு

Update: 2024-11-26 08:18 GMT

கடந்த 5 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு புதிய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களை பாதுகாப்பான வேளாண் மண்டல்களாக அறிவித்துள்ள நிலையில், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுத் திட்டங்களை தடை செய்ய, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க ஏதேனும் மத்திய கொள்கை உள்ளதா? என்று மயிலாடுதுறை எம்பி சுதா கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், கடந்த 5 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு புதிய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கவில்லை என்றும், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 3 திட்டங்களின் கால அளவை மட்டும் நீட்டித்துள்ளதாகவும் கூறியுள்ளார். கடலூர், விழுப்புரம், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 3 ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களை மத்திய அரசால் அறிவிக்க முடியும் என்றும், ஆனால், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்த முன்மொழிவும் வரவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்