மாணவர்கள் சேர்க்கைக்கு மஞ்சப் பை மாட்டி மேளதாளத்தோடு 'Intro'.. - "நம்ம பசங்க வேற ரகம்.."
தஞ்சை மாவட்டம் நரசிங்கன் பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் புதிதாக பள்ளியில் சேர்ந்த நிலையில், மாலை அணிவித்து மேள தாளங்களுடன் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதில், குழந்தைகளுடன், பெற்றோர்களும் ஆர்வமாக பங்கேற்றனர். பள்ளிக்கு வந்த மாணவர்கள் மஞ்சப்பையில் சிலேட் மற்றும், நோட்டு புத்தகங்களை எடுத்து சென்றனர்.