தமிழக தேசிய லோக் அதாலத் அமர்வு - ஒரே நாளில் 447 வழக்குகளுக்கு அதிரடி தீர்வு | Lok Adalat | Chennai
தமிழகம் முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில் 756 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான 86 ஆயிரத்து 443 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் தேசிய லோக் அதாலத் நேற்று நடத்தப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏழு அமர்வுகளும், மதுரைக் கிளையில் மூன்று அமர்வுகளும் அமைக்கப்பட்டன. மாவட்டங்கள் மற்றும் தாலுகா சட்டப் பணிகள் ஆணைக்குழுக்கள் 437 அமர்வுகள் என மொத்தம் 447 அமர்வுகளில், ஒரு லட்சத்து 54 ஆயிரம் வழக்குகள் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 5 ஆயிரத்து 81 விபத்து இழப்பீட்டு வழக்குகள், ஆயிரத்து 479 செக் மோசடி வழக்குகள் உட்பட, 756 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான 86 ஆயிரத்து 443 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன.