மத்திய அரசுக்கு அதிர்ச்சி - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு... | Supreme Court
- தேர்தல் ஆணையர்களை மத்திய அரசு நியமிக்கும் முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
- தேர்தல் ஆணையர்களை கொலிஜீய முறையில் நியமிக்க கோரி, அஸ்வினி குமார் உபாத்யாய் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி, கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
- அப்போது, புதிய சட்டம் இயற்றப்படும் வரை தேர்தல் ஆணையர்களை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு நியமிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு நியமிக்கும் முறையை ரத்து செய்வதாகவும் நீதிபதி அதிரடி தீர்ப்பினை வழங்கினார்.