"நீட் வழக்கு.. மாற்றங்கள் தேவை" - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

Update: 2023-02-27 07:59 GMT
  •     நீட் வழக்குகள் மருத்துவக் கல்வியில் சீர்த்திருத்தம் தேவைப்படுவதற்கான அடையாளம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார்...
  • 19-ஆம் ஆண்டு சர் கங்கா ராம் உரை நிகழ்வில் பங்கேற்று பேசிய அவர், நீட் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்...
  • மத்திய அரசின் கொள்கை சார்ந்த விவகாரங்களில் நீதிமன்றங்கள் அடிக்கடி தலையிட முடியாது என்று தெரிவித்த அவர், மாணவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பது மத்திய அரசின் கடமை என ஆணித் தரமாக வலியுறுத்தினார்.
  • மேலும், நீட் தொடர்பாக குவியும் அதிகமான வழக்குகள் இந்தியாவில் மருத்துவக் கல்வியில் சீர்திருத்தம் தேவை என்பதைக் காட்டுவதாகவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்