சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழை. திடீரென உருண்டு விழுந்த பாறை.. பழனி முருகன் கோயிலில் பரபரப்பு..!

Update: 2023-05-19 11:56 GMT

முருகன் கோயிலுக்கு கோடைகால நீர்தேக்கம், பாலாறு அணையில் இருந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 7 லட்சம் லிட்டர் தண்ணீர் பழனி மலை கோயிலுக்கு செல்கிறது. இந்நிலையில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக பாறை உருண்டு விழுந்ததில் அடிவாரத்தில் இருந்து மலைக் கோயிலுக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய் சேதம் அடைந்துள்ளது. இதனால் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், அடிப்படை வசதிகளுக்குத் தேவையான தண்ணீர் கிடைப்பதில் தற்போது சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்பு பயன்படுத்தி வந்த குடிநீர் குழாய் மூலம் தற்போது குடிதண்ணீர் தற்காலிகமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. கோயில் ஊழியர்கள் உடைந்த குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்