தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிப்புரிய தகுதி தேர்வாக செட் தேர்வை மனோன்மணியம் பல்கலைக்கழகம் நடத்த திட்டமிட்டு இருந்தது. தேர்வுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் செய்த வேளையில், தொழில்நுட்ப காரணங்களால் தேர்வை மனோன்மணியம் பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. இந்த சூழலில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் செட் தேர்வை நடத்திட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆணைக்கு உட்பட்டு உயர்கல்வித்துறை மற்றும் பல்கலைக்கழக பாட வல்லுநர்கள் மற்றும் பேராசிரியர்கள் உதவியோடு தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் என அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். தேர்வு வெளிப்படைத்தன்மை, நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும் என்றும் செட் தேர்வை நடத்த போதுமான நிர்வாக மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கொண்டுள்ளது எனவும் செட் தேர்வு சிறப்பாகவும் முறையாகவும் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்