`பொறுத்திருந்து பாருங்கள்.. நான் செய்து காட்டுகிறேன்' - பிரஸ் மீட்டில் அடித்து சொன்ன சசிகலா
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவுக்கு எதிரான மக்களின் மனநிலையை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் காட்டுவதாகவும், பொறுத்திருந்து பாருங்கள் என்றும் தெரிவித்தார். மேலும் அதிமுக மீண்டும் ஒன்றிணையுமா என்ற கேள்விக்கு, நல்லது நடக்கும் என்றும் சசிகலா பதிலளித்தார்.