சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!
சாலமன் தீவுகளில் 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, சாலமன்ஸ் கடற்கரைப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. நிலநடுக்கத்தை நேரில் கண்ட மக்கள், இது சுமார் 20 வினாடிகள் நீடித்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், நிலநடுக்கம் ஏற்பட்ட காரணமாக நகரின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.