உதகை மலை ரயில் சேவையை ஜூலை மாதம் வரை நீட்டித்து தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோடை சீசனை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் இந்த ரயில் சேவை ஜூலை 30-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.