தந்தையை கவனிக்காமல் தவிக்கவிட்ட மகன்கள் கைது..! - நெல்லை ஆட்சியர் அதிரடி...

Update: 2023-03-27 16:48 GMT

நெல்லையில் தந்தையை கவனிக்காத மகன்களை கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நெல்லை மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாத சாமி கோயில் தெருவை சேர்ந்த சுந்தரத்திற்கு முத்துகிருஷ்ணன், முத்து மணிகண்டன், செண்பகநாதன், செந்தில் முருகன் ஆகிய 4 மகன்கள் உள்ளனர். சுந்தரம் தனியார் பீடி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில், 4 மகன்களும் கவனிக்காமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியிடம் மனு அளித்தார். இதையடுத்து ஜீவனாம்சம் வழங்க ஆட்சியர் உத்தரவிட்டார். முத்துகிருஷ்ணன், முத்து மணிகண்டன் ஆகிய இருவரும் மாதம் 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கி வந்தனர். உத்தரவை மதிக்காத செந்தில் முருகன் மற்றும் செண்பகநாத​ன், ஆட்சியர் உத்தரவுப்படி கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்