சவுதி அரேபியாவில் நடைபெற்றுவரும் டக்கர் ராலி கார் பந்தயத்தின் எட்டாம் சுற்றில் பிரான்ஸ் வீரர் செபாஸ்டியன் லோயெப் வெற்றி வாகை சூடினார். 14 சுற்றுகளாக இந்த தொடர் நடைபெற்றுவரும் நிலையில், 367 கிலோ மீட்டர் தூரத்துக்கு எட்டாம் சுற்றுப் பந்தயம் நடைபெற்றது. இதில் பந்தய தூரத்தை 3 மணி நேரம் 24 நிமிடம் 24 மணித்துளிகளில் கடந்து லோயெப் முதலிடம் பிடித்தார். பைக் பிரிவில் நடைபெற்ற பந்தயத்தில் போஸ்ட்வானா வீரர் ரோஸ் பிரான்ச் (Ross Branch) 8ம் சுற்றில் வெற்றி கண்டார்.
--