2 வயது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த SK..! இணைதளத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி, மகள், மகனுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகன் குகன்தாசின் இரண்டாம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, சிவகார்த்திகேயன் தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவரது மகன் குகன்தாசுக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.