தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதால், பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளிவைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஜுன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜுன் 5ம் தேதி பள்ளிகள் செயல்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேலாக வெப்ப அலை வீசி வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பள்ளிகள் திறக்கப்படுமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வெயிலின் தாக்கம் குறையாத பட்சத்தில், பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.