- பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அரசு பரிந்துரைத்து வருகிறதா என, கர்நாடக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
- இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய இணையமைச்சர் நாராயணசாமி, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் பரிந்துரை எதுவும் அமைச்சகத்திடம் நிலுவையில் இல்லை என தெரிவித்துள்ளார்.
- அதே சமயம், கர்நாடக மாநிலத்தில் பட்டியலினத்தவர், பழங்குடியினத்தவர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு முறையே 17% 7% 32% என 56% ஆக இருப்பதாக பதில் அளித்துள்ளார்.