"நகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறதா?" - நகர்மன்ற துணைத்தலைவர் பேச்சால் பரபரப்பு
- சங்கரன்கோவில் நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக நகர்மன்ற துணைத்தலைவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில், நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள், தங்கள் பகுதிகளில் நடைபெறாத பணிகள் குறித்து கேள்வி எழுப்பினர்.
- அப்போது பேசிய நகர்மன்ற துணைத்தலைவர் கண்ணன், லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், வரி வசூல் செய்பவர்கள் 20 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கிக் கொண்டு வேலை பார்ப்பதில்லை என்றும் கூறினார்.
- இதையடுத்து, வரி வசூல் செய்பவர்களை வரவழைத்து, ஒழுங்காக வேலையை பார்க்க வேண்டும் என எச்சரித்தார்.