சல்யூட்..! குண்டுகள் பாய்ந்தும் பயங்கரவாதிகளுடன் போரிட்ட வீரன்... ஜூமிற்கு இந்தியர்கள் இதய அஞ்சலி...

Update: 2022-10-14 02:10 GMT

சல்யூட்..! குண்டுகள் பாய்ந்தும் பயங்கரவாதிகளுடன் போரிட்ட வீரன்... ஜூமிற்கு இந்தியர்கள் இதய அஞ்சலி...

கடந்த ஞாயிற்றுக்கிழமை காஷ்மீர் மாநிலம் ஆனந்த்நாக்கில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையின் போது, ராணுவத்திற்கு

உதவியாக செயல்பட்ட ஜூம் மோப்ப நாய் குண்டடிப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீநகர் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக

அனுமதிக்கப்பட்ட ஜூம் விரைந்து குணமடைய நாடு முழுவதும் பிரார்த்தனை செய்யப்பட்டது. தொடர் சிகிச்சையில் ஜூம் உடல் நிலையில்

முன்னேற்றம் காணப்படுவதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தும்

வகையில் மதியம் திடீரென ஜூம் உடல்நிலை மோசமடைந்ததாகவும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாகவும் ராணுவம் தரப்பில்

தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்காக பயங்கரவாதிகளுக்கு எதிராக வீர தீரமாக போராடி உயிர்நீத்த ஜூமிற்கு ராணுவம் தரப்பில் இரங்கல்

தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களும் தங்கள் இதய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்