தி.நகரில் அதிர்ச்சி..பூமிக்குள் உள்வாங்கிய வீடு-``பணத்த சமாதியில வைப்பீங்களா?’' -ஓனர் காட்டம்

Update: 2024-12-22 03:08 GMT

மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வீட்டின் தரைப்பகுதி திடீரென உள்ளே சென்றதால் தியாகராய நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள தியாகராய நகரில் மெட்ரோ ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் லாலா தோட்டம் இரண்டாவது தெரு பகுதியில் உள்ள வீட்டின் தரைப்பகுதி திடீரென உள்ளே சென்றது. வீட்டினுள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பள்ளமான பகுதியில் தற்போது மெட்ரோ பணியாளர்கள் கான்கீரிட் இட்டு நிரப்பி வருகின்றனர். மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் பாதுகாப்பு இன்றி இருப்பதாகவும், அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் எனவும் அப்பகுதியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்