``தலைக்கேறிய போதையில் 2 முறை உடலுறவு’’ - சென்னை ரயில்வே ஸ்டேஷனில் பெண் மாரடைப்பில் மரணம்

Update: 2024-12-22 03:24 GMT

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் லட்சுமி என்ற 63 வயது மூதாட்டி சடலமாக கிடந்துள்ளார். சடலத்துக்கு அருகே சந்தேகப்படும் படியாக முத்து என்ற மாற்றுத்திறனாளி இருந்த‌தால், மூதாட்டியின் உறவினர்கள் தாக்கினர். அவர் காயமடைந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மூதாட்டியும் முத்துவும் இரவு மது அருந்திய நிலையில், இருமுறை உறவு கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மீண்டும் சென்றபோது அசைவின்றி கிடந்த‌தால், கொலை செய்துவிட்டதாக கருதி உறவினர்கள் தாக்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதே நேரத்தில் மூதாட்டி மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்க‌ கூடும் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்