"உரிமையாளர் யார்?".. ஒரே கேள்வியில் ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு ஷாக் தந்த சைதை கோர்ட்

Update: 2023-04-01 12:35 GMT

அதிமுக தலைமை அலுவலகத்தில் சூறையாடப்பட்ட பொருட்களின் உரிமை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கின் முடிவில் தான் தெரியவரும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி வானகரத்தில் நடைபெற்றது.

அப்போது கட்சி தலைமை அலுவலகத்தில் புகுந்த ஒபிஎஸ் தரப்பினர், அலுவலகத்தில் இருந்த சொத்து ஆவணங்கள், வாகனங்களின் பதிவு புத்தகங்கள், கணினிகளை சூறையாடியாதாக, ஈபிஎஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றத்தில் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன.

இந்த பொருட்களை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி ஈபிஎஸ் தரப்பும், ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஓ.பி.எஸ் தரப்பும் மனுத்தாக்கல் செய்தன.

மனுக்களை விசாரித்த நீதிபதி மோகனாம்பாள், அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொது செயலாளர் தேர்தல் தொடர்பான பிரதான உரிமையியல் வழக்குகளில் இடைக்கால மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பிரதான வழக்கில் இறுதி தீர்ப்பு பிறப்பிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள பொருட்களுக்கு யார் உரிமையாளர் என்று தற்போது முடிவு செய்ய முடியாது என்று கூறி, இரு தரப்பு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்