ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோவில், சுமார் 72 சதவீதம் வாடிக்கையாளர்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு கடந்த 19ம் தேதி, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளொன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. இந்நிலையில், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோவில், கடந்த வெள்ளிக்கிழமை முதல், சுமார் 72 சதவீதம் வாடிக்கையாளர்கள், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றியுள்ளதாக அந்நிறுவனம் ட்விட்டரில் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.