ரொனால்டோ எடுத்த திடீர் முடிவு..பேரதிர்ச்சியில் கால்பந்து உலகம் - அணியில் குழப்பம் ஏற்படுமா?

Update: 2022-11-23 11:13 GMT

முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக மான்செஸ்டர் யுனைடெட் அணி அறிக்கை வெளியிட்டுள்ளது. கால்பந்து உலகக் கோப்பைக்கு முன்னதாக ரொனால்டோ ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அதில், அவர் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளர்கள் குறித்தும், மேலாண்மை குறித்தும் விமர்சித்து இருந்தார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்த அணி, அவரின் ஒப்பந்தத்தை உடனடியாக முறித்துக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் ரொனால்டோ இதுவரை 300க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்