ரோகிணி தியேட்டர் விவகாரம்... சாதிச்சான்றிதழை ஆய்வு செய்த போலீஸ் - வழக்கில் திடீர் மாற்றம்
சென்னை ரோகினி திரையரங்கில் பத்துதல படத்தை பார்க்க, நரிக்குறவர் சமூகத்தவர்களை அனுமதிக்காதது குறித்த காட்சிகள் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ரோகினி திரையரங்கு ஊழியர்கள் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டோரின் சாதிச்சான்றிதழை ஆராய்ந்தபோது, அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரோகினி திரையரங்கு ஊழியர்கள் மீது போடப்பட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர். ஆனால் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல் என்ற பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.