அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் இந்தியா கூட்டணி வலுவிழக்காது என தமிழக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டியளித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் மறைந்த காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் சிலை, உருவப் படத்திற்கு, செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, போர் நெருக்கடியில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு பதாகை ஏந்தியப்படி ஆதரவு தெரிவித்தார். மேலும், பணம் சம்பாதிப்பதற்காக சவுக்கு சங்கர் தம்மை பற்றி பேசுவதாகவும் அவர் கூறினார்.