நேருக்கு நேர் மோதி நொறுங்கிய 2 பேருந்துகள் - உள்ளே சிக்கிய 30 பேரின் நிலை?
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாம்பல்பட்டி தரைப்பாலத்தில், அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில், 30 மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்த நிலையில், போலீசார் மற்றும் அப்பகுதியினர் மீட்பு பணியில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில்வே தரைப்பாலத்தின் சாலை மோசமாக இருப்பதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.