"மிக பெரிய பாக்கியமாக கருதுகிறேன்"- - ரிஷி சுனக் நெகிழ்ச்சி பேட்டி | RishiSunak | Britain

Update: 2022-10-25 01:44 GMT

ரிஷி சுனக், இங்கிலாந்தின் புதிய பிரதமர் ( தமிழ் டப்பிங்)"லிஸ் டிரஸை நினைவு கூற விரும்புகிறேன்.. கடின காலத்தில் பல மாற்றங்களுக்காக மிகவும் கண்ணியத்துடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றியவர், லிஸ் டிரஸ். எனது கட்சி எம்பிக்களின் ஆதரவை பெற்றிருப்பதில் பணிவும் பெருமையும் கொள்கிறேன். நான் மிகவும் நேசிக்கும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது என பாக்கியமாக எண்ணுகிறேன். இதனை கொண்டு நான் மிகவும் நேசிக்கும் எனது நாட்டிற்கு பரிசளிக்க விரும்புகிறேன். தற்போது நாம் ஒற்றுமையுடனும், ஸ்திரத்தன்மையுடனும் இருக்க வேண்டியது முக்கியம். இதன் மூலமே பல சவால்களை எதிர்கொண்டு, நமது குழந்தைகளுக்கும், பேர குழந்தைகளுக்கும் வளமான எதிர்காலத்தை நாம் உருவாக்க முடியும்"

Tags:    

மேலும் செய்திகள்