கீப்பிங் பயிற்சியில் ரிஷப் பண்ட்... வெளியான காயம் பற்றிய மெகா அப்டேட் - ரசிகர்கள் மகிழ்ச்சி
காயத்தில் இருந்து குணமடைந்து, தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள இந்திய வீரர்களின் நிலை குறித்த தகவலை பிசிசிஐ வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ராவும் பிரஷீத் கிருஷ்ணாவும் பந்துவீச்சுப் பயிற்சியை மேற்கொண்டு வருவதாகவும், சில பயிற்சி ஆட்டங்களில் ஆடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், கே.எல்.ராகுலும் ஷ்ரேயாஸ் ஐயரும் பேட்டிங் பயிற்சியை தொடங்கி இருப்பதாகக் கூறப்பட்டு உள்ளது. இதேபோல் ரிஷப் பண்ட் பேட்டிங் மற்றும் கீப்பிங் பயிற்சியை தொடங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.