செவிலியர் பிரசவம் பார்த்ததாக புகார்! ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தை இறப்பு

Update: 2022-10-03 06:08 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அலமாதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மித்ரா என்பவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இரவுப் பணியில் மருத்துவர் இல்லாததால் செவிலியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். இதில் குழந்தை இறந்து பிறந்த நிலையில், மருத்துவர், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்