ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியீடு.. ஒரே நாளில் சரிந்த அதானி சாம்ராஜ்யம் -அமெரிக்காவில் அதானி மீது விசாரணை

Update: 2023-06-25 00:57 GMT

அமெரிக்க அரசின் நீதித் துறை அதானி குழுமம் பற்றி விசாரணையை தொடங்கியுள்ளதால், அதானி நிறுவன பங்கு விலைகள் சரிந்துள்ளன. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

அதானி குழுமத்தின் முறைகேடுகள் பற்றிய ஹிண்டன்பர்க் அறிக்கை ஜனவரி 24ல் வெளியான பின், அதானி குழும பங்கு விலைகள் வெகுவாக சரிந்து, முதலீட்டாளர்களுக்கு 9.4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

இதன் விளைவாக உலகப் பணக்கார்கள் வரிசையில் மூன்றாம் இடத்தில் இருந்த கெளதம் அதானி, தற்போது 23ஆம் இடத்திற்கு சரிந்துள்ளார்.


அதானி குழுமம் பங்கு விலைகள் தொடர்பான முறைகேடு களில் ஈடுபட்டத்தற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழுஅறிக்கை சமர்பித்தது. இதைத் தொடர்ந்து, அதானி குழும பங்கு விலைகள்

மீண்டும் உயரத்தொடங்கின.


இந்நிலையில், அதானி குழும பங்குகளை பெரிய அளவில் வாங்கியுள்ள அமெரிக்க நிதி நிறுவனங்கள் பற்றி அமெரிக்கா வின் நியூயார்க் நகர அட்டார்னி அலுவலகம், விசாரணையை சமீபத்தில் தொடங்கியது.

இதனால், வெள்ளியன்று அதானி குழும பங்கு விலைகள் வெகுவாக சரிந்தன. முதலீட்டாளர்களுக்கு 48,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் கீழே மீண்டும் சரிந்து, 9.8 லட்சம் கோடி ரூபாயக சரிந்துள்ளது.

அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸின் சந்தை மதிப்பு 18,599 கோடி ரூபாய் சரிந்து, 2.5 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது.


அதானி குழுமம் எந்த ஒரு நாட்டின் சட்டத்தையும், விதிமுறைகளையும் மீறவில்லை என்று அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். அதானி குழுமம் அனைத்து நாட்டு சட்டங்களையும் மதிக்கும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்