புதுவையை தொடர்ந்து மதுரையில் நடந்த சோகம் - கண்ணீரில் மூழ்கிய கிராமம்

Update: 2022-11-30 15:43 GMT

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே இறந்த கோயில் ஜல்லிக்கட்டு காளைக்கு, கிராம மக்கள் ஒன்றுக்கூடி கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர். ஆதனூரில் இருக்கும் முத்தாலம்மன் கோவில் காளை அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியில் பங்கேற்று பரிசுகளை வென்று அசத்தியது. இந்த நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட காளை திடீரென இறந்தது. காளையின் இறப்பை அறிந்த கிராம மக்கள் பிரமாண்ட இறுதி அஞ்சலிக்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி, இறுதி அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டு, கும்மியடித்து காளைக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்